உள்ளூர் செய்திகள்

பிரதமரின் கிசான் திட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

Published On 2022-08-27 06:08 GMT   |   Update On 2022-08-27 06:08 GMT
  • 12-வது தவணை தொகை பெறுவதற்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
  • eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர்

நமது நாட்டில் விவசாயிகள் விவசாயம் செய்யத் தேவையான முக்கியமான இடு பொருட்களை தற்சார்புடன் வாங்குவதற்கு உதவிட பிரதமரின் கவுரவ நிதி உதவித்திட்டம் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணைகள் பணம் வரவு வைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பணப் பரிமாற்றத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் நடப்பு 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

அதனடிப்படிடையில் தற்போது eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் நில உடைமைப்பட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பிரதமரின் கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக அவற்றை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

12-வது தவணை பணப்பலன் பெற கட்டாயம் இந்த இரு வழி முறைகளையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும், வருகிற 31-ந் தேிக்குள் இந்த இரு நடை முறைகளையும் விவசாயிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

Tags:    

Similar News