- கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பிரசித்தி பெற்ற வல்மீகநாதர்-பாகம்பிரியாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திங்கள், வியாழக்கிழமை தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு உள்ள வாசுகி தீர்த்தக்குளத்தில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தக்குளம் தூர்வாரபட்டுள்ளது.
இருப்பினும் அதில் தேங்கி உள்ள தண்ணீர் பாசி படர்ந்து நீராட முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் நீராட தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குளத்தில் தேங்கி உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி புதிதாக மணல் பரப்பி குளத்தை சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.