உள்ளூர் செய்திகள்

பேவர் பிளாக் கற்களுடன் மறுபக்கம் மணல் குவியலும் இருப்பதால் வாகனங்களை இயக்க வாகனம் ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கீழக்கரையில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் பள்ளி செல்லும் சாலை

Published On 2023-06-05 07:46 GMT   |   Update On 2023-06-05 07:46 GMT
  • கீழக்கரையில் பள்ளி செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் கிடக்கிறது.
  • பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும்

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை. குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் கிடக்கின்றன. மறுபக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்னமும் சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளி வாகனங்கள் செல்வதற்கும், மாணவர்கள் நடந்து செல்வதற்கும், மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் வாகனங்களை ஓட்டி வருவதற்கும் சிரமமாக இருக்கும்.

இதுகுறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை பணிகள் 5-ந்தேதி தொடங்கி பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும் என்றார்.

வழக்கம்போல் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி விரைவாக இந்த சாலையை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News