உள்ளூர் செய்திகள்

மானாவாரி பயிர்களில் மகசூலை அதிகரிக்க விதை கடினப்படுத்துதல் முக்கியம்

Published On 2023-10-17 07:51 GMT   |   Update On 2023-10-17 07:51 GMT
  • மானாவாரி பயிர்களில் மகசூலை அதிகரிக்க விதை கடினப்படுத்துதல் முக்கியமானது.
  • இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

ராமநாதபுரம்

மானாவாரியில் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவாரி பயிர்க ளில் மகசூலை அதிகரித்திட விதை கடினப்படுத்துதல் என்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.

விதை கடினப்படுத்துதல் என்பது விதையினை சில மணி நேரங்கள் நீரில் ஊற வைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்ப தத்திற்கு உலர வைத்தல் ஆகும். நீருடன் சில மருந்து களை கலந்து ஊறவைத்து விதைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட் சியை தாங்கி வளர்வதுடன் மிகக் குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

நெல், கம்பு, பருத்தி விதைகளை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் குளோரை டினை 1 லிட்டர் தண்ணீ ரில் கரைக்க வேண் டும். இக்கரைசலில் 550 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப் பதம் வரும் வரை நிழலில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

சோளம்

சோளம் விதையை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 18 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை நிழலில் வைத்த பின் விதைக்க வேண்டும்.

உளுந்து, பாசிப்பயறு

உளுந்து, பாசிப்பயறு விதைகளை கடினப்படுத்த 1 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 கிராம் மாங்கனீசு சல்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரை சலில் 350 மில்லி லிட்டர் எடுத்து அதில் 1 கிலோ விதையினை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைக்க பயன்படுத்தும் விதையின் அளவை பொறுத்து கரைசலின் அளவினை கூட்டிக் கொள்ளலாம்.

இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News