உள்ளூர் செய்திகள்

திருவாடானை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார்.அருகில் கலெக்டர் ஜான்டாம் வர்கீஸ், மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சிகணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்ளனர்.

அரசு முதன்மை செயலர் ஆய்வு

Published On 2022-08-06 08:19 GMT   |   Update On 2022-08-06 08:19 GMT
  • அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார்.
  • ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார்.

ராமநாதபுரம்

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலரும், ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் கணினி வழி பட்டா மாறுதல் மற்றும் ஒ.பி.சி. சான்றுகள் வழங்குவது குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் இ-சேவைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து திருவாடானை ஊராட்சி ஒன்றியம் அச்சன்குடி ஊராட்சியில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்ட நூலக கட்டிட பணிகளையும், முகிழ்தகம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் இயேசுபுரம் பச்சவரா ஊரணியை தூர்வாரும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துறை யின் நுண்ணுயிர் உர தயாரிப்பு மையத்தினை பார்வையிட்டார். ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார். தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் சார்பில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

Tags:    

Similar News