உள்ளூர் செய்திகள் (District)

கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டதையும், கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-27 08:25 GMT   |   Update On 2023-03-27 08:25 GMT
  • பரமக்குடியில் இன்று சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வண்டியூர் என்னும் காக்காத் தோப்பு சோலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி, சுந்தர பாலஆஞ்சநேய சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடந்தது. கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை உரப்புளி ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி ரவிந்திரன், துணைத்தலைவர் மல்லிகா நாகராஜன், ஊராட்சி செயலர் ரமேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள் அசோக்குமார், கலை முருகன், தினகரன், விஜயலட்சுமி, மல்லிகா, லட்சுமி காந்தம், ராணி, சுலோசனா ஆகியோர் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம்-அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News