போலீஸ் ஏட்டு விட்டு சென்ற பணத்தை திரும்ப ஒப்படைத்த வாலிபர்கள்
- போலீஸ் ஏட்டு விட்டு சென்ற பணத்தை வாலிபர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
- அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் வீரமுத்துமணி. இவர் நேற்று முன்தினம் இரவு கமுதி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு வங்கி கணக்கிற்கு ரூ.9500 அனுப்பினார். எந்திரத்தில் பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால் பணம் அனுப்பப்படாமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே இருந்து உள்ளது. அதன் பிறகு அந்த மையத்திற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (19), சரவணகுமார் (21) ஆகிய 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். இதைத்தொடர்ந்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், குத்தாலிங்கம், மற்றும் தலைமை எழுத்தர் சித்ரா ஆகியோர் பணத்தை ஒப்படைத்த 2 வாலிபர்களை யும் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் ஏட்டு வீரமுத்துமணியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.