உள்ளூர் செய்திகள்

போதை மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது

Published On 2023-05-13 07:13 GMT   |   Update On 2023-05-13 07:13 GMT
  • போலீசார் விசாரணை
  • ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலம் பறிமுதல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக ராணிப்பேட்டை கலால் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் ராணிப்பேட்டை, பொன்னை சாலையில் அக்ராவரம் பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை காரையைச் சேர்ந்த ஜுஜிலி என்ற பிரதீப் குமார் (26), அம்மூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (23), வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (22) என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலமும், 20 போதை மாத்திரைகளும் இருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த 3வாலிபர்களையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 672 என கலால் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News