உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் 54 ரெயில்கள் ரத்து

Published On 2023-07-18 09:52 GMT   |   Update On 2023-07-18 09:52 GMT
  • பயணிகள் கடும் அவதி
  • புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது

அரக்கோணம்:

சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்துக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்ப ரத்துக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்க ணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களின் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள புறநகர் மின்சார ரெயில் சேவையில் 54 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கும், பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை செல்லும் ரெயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.

Tags:    

Similar News