உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற உறவினர்களை படத்தில் காணலாம்.

வாலிபர் கொலையில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டும்

Published On 2023-11-18 07:59 GMT   |   Update On 2023-11-18 07:59 GMT
  • கலெக்டரிடம் பெற்றோர் மனு
  • போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், காவே ரிப்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து, கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் தாய் செல்வி (வயது 52) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், எனது மகன் இளவரசன் (28), லாரி டிரைவர். இவரை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து, கடந்த 15- ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனை ஆற்காடு தாலுகா பெருங்கல் மேடு பாலாற்று பகுதியில் கொலை செய்து புதைத்ததாக லோகேஷ் (28), வாசுதேவன் (27), அருண்குமார் (33), பூவரசன் (24) ஆகிய 4 பேரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News