உள்ளூர் செய்திகள்

உருட்டு கட்டை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்

Published On 2023-02-19 08:53 GMT   |   Update On 2023-02-19 08:53 GMT
  • போலீசார் கைது செய்து விசாரணை
  • மயான கொள்ளை விழாவையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணி

அரக்கோணம்:

அரக்கோணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி நகரில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பழைய குற்றவாளி களை பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் வின்டர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற பொது மக்களை உருட்டு கட்டையை வைத்துக்கொண்டு குருபிரசாத் (வயது 26) என்பவர் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குரு பிரசாத்தை கைது செய்து உருட்டு கட்டையை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News