உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Published On 2023-07-08 08:17 GMT   |   Update On 2023-07-08 08:17 GMT
  • 98 பேர் வேலை செய்து வருகின்றனர்
  • குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சுவார்த்தை

நெமிலி:

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் 29 ஊராட்சிகள் உள்ளது. இதில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 74 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் 56 அங்கன்வாடி பணியாளர்கள், 42 உதவியாளர்கள் என மொத்தம் 98 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காவேரிப்பாக்கம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றிவரும் விஜயலட்சுமி என்பவர் அங்கன்வாடி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News