உள்ளூர் செய்திகள்

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-12 07:27 GMT   |   Update On 2023-06-12 07:27 GMT
  • கலெக்டர் தகவல்
  • 30-ந் தேதி கடைசி நாள்

ராணிப்பேட்டை:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின், தலைமை செயல் அலுவலரால் "அனைவருக்கும் இ-சேவை" மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை இணையவழி முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கீழ்கண்ட "https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in" என்ற இணைய முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளவும் விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதி வரை காலை 11.30 முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்துக்கொள்ளலாம்.

கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3ஆயிரம்/- மற்றும் நகர்ப்புறத்திற்கு ரூ.6 ஆயிரம்/- செலுத்த வேண்டும். மேலும் அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை "முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in இணையதளத்தின் மூலம் காணலாம்.

இந்த திட்டத்தில் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பயனடைய வேண்டும்

என கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News