பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
- நெமிலி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்திற்கான பேரணி, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.
இப்பேரணியை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர்ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேதமுத்து, சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் என திரளானோர் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.