உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.

வங்கிகளில் கடன் தர அதிகாரிகள் அலைக்கழிப்பு

Published On 2022-11-19 07:45 GMT   |   Update On 2022-11-19 07:45 GMT
  • குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
  • காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதாக புகார்

அரக்கோணம்:

அரக்கோணத்தில் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.கோட்டாட்சியர் பாத்திமா தலைமை தாங்கினார்.

வங்கி கடன்

இதில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- மத்திய மாநில அரசு விவசாயிகளுக்கு கடன் தர ஒப்புதல் அளித்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் அலைக்கழிக்க செய்கின்றனர்.

பெருவளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை வருவாய் துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்கு விவசாய நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது. இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறை தீர்வு கூட்டத்திற்கு அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், நெமிலி தாசில்தார் சுமதி, நேர்முக உதவியாளர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, நெமிலி தோட்டக்கலை உதவி அலுவலர் சுமதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News