- குடும்பத்தினர் வழிபாடு
- கோவில் குருக்களை வரவழைத்து சிறப்பு பூஜை செய்தனர்
ராணிப்பேட்டை:
இமயமலை போன்ற குளிர்ச்சியான மலை பகுதிகளில் மட்டும வருடத்திற்கு ஒரு முறை பூத்து குலுங்குவது பிரம்ம கமலம் பூ படைக்கும் கடவுள் பிரம்மானக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்ம கமலம் பூ குளிர்காலத்தில் மட்டுமே நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அதிக நறுமணத்துடன் ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும்.
அந்த பூ மலரும் போது வேண்டினால் அது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த பிரம்ம கமலம் பூ தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை பூ என கூறப்படுகிறது.
இந்நிலையில் வாலாஜாவில், ஆற்காடு தெத்து தெரு பகுதியில் வசித்து வரும் முனிரத்தினம், கிருஷ்ணவேணி தம்பதிகள் வேலூரில் தோட்டக்கலையிலிருந்து நான்கு வருடங்களுக்கு முன் இந்த பிரம்ம கமல பூ செடியை வாங்கி வந்து வீட்டில் பூத்தொட்டியில் வளர்த்து வந்தனர். நேற்று இரவு இரண்டு பூ தொட்டியகளில் திடீரென 6-க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளன.
பூ பூத்ததை கண்ட அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து கோவில் குருக்களை வரவழைத்து பிரம்ம கமல பூக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கூட்டமாக வந்து பூவை வணங்கி சென்றனர்.
சிவனடியார்களும் தேவாரம், சிவபுராணம், திருவாசகம் என சிவனின் பாடல்களை பாடியவாறு பூவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.