உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சி

Published On 2023-06-21 08:48 GMT   |   Update On 2023-06-21 08:48 GMT
  • நீதிபதிகள் பங்கேற்பு
  • தியான பயிற்சியில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை:

உலக யோகா தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பார் அசோசியேசன் தலைவர் நித்யானந்தம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, மாஜிஸ்திரேட் நவீன் துரை பாபு ஆகியோர் கலந்து கொண்டு தியானம் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

யோகா மாஸ்டர் வஜ்ஜிரவேல், பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் தியானம் பயிற்சி அளித்தனர்.

இதில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பார் அசோசியேசன் செயலாளர் ஜான் சாலமன்ராஜா நன்றி கூறினார்.

இதே போல் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் நடத்திய யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் கபில்தேவ், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், பத்மாசனம், தனுராசனம், வஜ்ஜிராசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.

Tags:    

Similar News