விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்
- குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி வழங்கினார்
- மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வளர்மதி தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பொதுப்பிரச்சினைகள் குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 201 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு தெரிவித்திட உத்தரவிட்டார்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கொண்டு வட்டார அளவில் போட்டி கள் நடத்தப்பட்டடது.
இதில் வெற்றி பெற்ற 72 மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வளர்மதி வழங்கினார். இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.