உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பின் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்த காட்சி.

கல்லூரி மாணவிகள் உதவித்தொகை பெற கடன் அட்டை வழங்க வேண்டும்

Published On 2023-05-20 08:01 GMT   |   Update On 2023-05-20 08:01 GMT
  • வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு
  • அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல் அமைச்சரின் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பின் பணிகள் முன்னேற்றம் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையருமான வி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றங்கள் குறித்தும், இத்திட்டத்தில் பல்வேறு துறைகள் இணைந்து மக்களுக்கான வளர்ச்சி களை மேற்கொள்ள திட்டத்தினை செயல்ப டுத்தவும் கேட்டுக் கொண்டார்.

மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படாமல் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டார்.

நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்கவும். புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணி விரைவாக முடிக்கவும், முதல் அமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகளுக்கு கட்டப்பட்டு வரும் சமையற்கூடங்கள் பணிகளையும் விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்க பெறாமல் உள்ளவர்களுக்கு விரைவாக வங்கிக் கடன் அட்டை வழங்கி அவர்க ளுக்கான உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்னாடி வங்கிகளை கேட்டுக் கொண்டார்.

நமக்கு நாமே திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் எஞ்சியுள்ள பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறைகளை கேட்டதிலிருந்து அப்பணி களை விரைவாக முடிக்கவும் உத்தர விட்டார்கள்.

அனைத்து துறை அலுவலர்களும் தமிழ்நாடு அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களில் தனி கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

இதில் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் மூலமாக, தன்னுடைய கவனத்திற்கு தெரிவிக்கவும் கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News