ரூ.1.92 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள்
- கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு
- ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.80லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் வெட்டப்படும் பணி, 13-வது வார்டில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உலர்த்திட உலர் களம் அமைக்கும் பணி, ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்பில் தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை வைக்கும் குடோன் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.69லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அல்லிகுளம் சாலை அமைக்கும் பணி, நரசிங்கபுரம் பகுதியில் இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணி என மொத்தம் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அரிசி சரியில்லாததை பார்த்து இதனை மாற்றி பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர்(பொறுப்பு) அம்சா, செயல் அலுவலர் கோபிநாத், வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இருந்தனர்.