உள்ளூர் செய்திகள்

30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

Published On 2023-02-25 09:32 GMT   |   Update On 2023-02-25 09:32 GMT
  • வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது
  • ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வலியுறுத்தல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்வதற்காக 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படுகிறது.

அதன்படி தப்பூர், மேல் வீராணம், கீழ் வீராணம், பாணாவரம், சூரை, கொடைக்கல், செங்காடு, கூராம்பாடி கரிக்கந்தாங்கல், அனந்தாங்கல், திருமால்பூர், ஜாகீர் தண்டலம், ரெட்டி வலம், அகவலம், நெமிலி, பனப்பாக்கம், கீழ்களத்தூர், சயனபுரம், மகேந்திரவாடி, கீழ்வீதி, சிறுகறும்பூர், பெரும்புலிபாக்கம், வேடந்தாங்கல், சிறுவளையம், எஸ்.கொத்தூர், அத்திப்பட்டு, துரைபெரும்பாக்கம், அருந்ததிபாளையம், செய்யூர், எஸ்.என்.கண்டிகை ஆகிய 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அசல் அடங்கல் ஆவணங்களுடன் சென்று முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.

நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவு கள் மேற்கொள்வார்கள். பதிவு உறுதி செய்ததும் சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு செல்ல வேண்டும்.

நெல் விற்பனை செய்ய வரும் போது நேரடி கொள்முதல் மையத்தில் பதிவுகள் மேற்கொண்ட ஆவணங்களுடன் சென்று இதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News