உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு
- நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும்
- ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.