மானிய விலையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள்
- ஆத்மா திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்
- விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் சயனபுரம் கிராமத்தில் நெல் வயல் விழா நடத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி அருணா குமாரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேல் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் விவசாயிகளுடன் தொழில்நுட்ப பதாகைகளை ஏந்தி தொழில்நுட்ப விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
விழாவில் 50 விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து 30 விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் 10 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் 20 விவசாயிகளுக்கு இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சிவராஜ் கலந்து கொண்டார்.
முடிவில் வேளாண்மை துணை அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் புண்ணியராஜ், செந்தில், ஆத்மா திட்ட அலுவலர்கள் நிர்மலா தேவி ராஜேந்திரன் ராமதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் விழாவில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.