நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா
- கலச பூஜைகள் நடந்தது
- ஏராளமானோர் தரிசனம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்த நவராத்திரி இன்னிசை நிறைவு விழா, பாலாபீடாதிபதி நெமிலி கவிஞர் எழில்மணி தலைமை யில் நேற்று முன்தினம் நடை பெற்றது.
விழாவில் திரைப்பட இசைய மைப்பாளர் பாலரத்னா ஆர். கே.சுந்தர் தமது குழுவினருடன் கலந்துகொண்டு பக்தி பாடல் களை வழங்கினார். அன்னை பாலாவிற்கு பாலா பீட நிர்வாகி மோகன்ஜி பத்து நாளும் தச மகாலட்சுமி அலங்காரம் செய்து பாலா கலச பூஜைகளை நடத்தினார்.
விஜயதசமியை முன்னிட்டு நெமிலி குருஜி பாபாஜி பள்ளி யில் சேரும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் செய்து வைத்தார். பீடாதிபதியின் துணைவியார் நாகலட்சுமி எழில் மணி, சுஹாசினி பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ வளையல், புடவை மற்றும் ரவிக்கை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பக்தர்கள் நவராத்திரி கலசத்தில் அமைந்த அன்னை பாலாவை தரிசனம் செய்தார்கள்.
பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன் னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலா ஆத்மீக குடும்பங்கள் மற்றும் நெமிலி இறைப்பணி மன்ற அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.