உள்ளூர் செய்திகள்

வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-10-17 07:09 GMT   |   Update On 2023-10-17 07:09 GMT
  • தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது
  • 1800 குடும்பங்கள் பயனடைந்தனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

வேளாண்மைத்துறை சார்பாக இந்த ஆண்டு மாகாணிப்பட்டு, சிறுவளையம், பெறுவளையம், சங்கரன் பாடி, சிறுகரும்பூர் மற்றும் அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குறு சிறு மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 1800 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது.

நடவு மேற்கொள்ளப்பட்ட தென்னங்கன்றுகளை சென்னை வேளாண்மை ஆணையரக துணை இயக்குநர் ஸ்ரீவித்யா நேற்றுமுன்தினம் சிறுவளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமாபுரம், பள்ளிப்பட்டறை மற்றும் பெருவளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பலாம்பட்டு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இத்தரிசு நில தொகுப்பில் வரப்போரம் வேளாண்மை துறையினரால் நடப்பட்ட தேக்கு, மகாகனி முருங்கை மற்றும் அகத்தி மர கன்றுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம், மாவட்ட வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்) வினோத் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகாஷ் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News