ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மைய கட்டிட பணி
- சோளிங்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட உளியநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கவுரி வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி சம்பத், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணி, ஜெயக்குமார், காங்கிரஸ் நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் கீழ்வீதி பாலாஜி, வேலு உட்பட கலந்து கொண்டனர்.