உள்ளூர் செய்திகள்

நவல்பூர் கற்பகம் கூட்டுறவு ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1000 ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கிய போது எடுத்த படம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.45 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு

Published On 2023-01-09 09:40 GMT   |   Update On 2023-01-09 09:40 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.45 லட்சம் ரேசன் அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 376 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணன் வரவேற்றார்.

ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், ஒன்றியக்குழு தலைவர் வெங்கடரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஒரு கிலோ அரிசி, கரும்பு, வேட்டி, சேலை, ரூ.1000 பணம் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பேசியதாவது:-

இந்த பொங்கல் தொகுப்பு இன்று முதல் 12-ந்தேதி வரையில் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அனைத்து ரேசன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் சர்க்கரை, ரொக்கம் ரூ.1000 வழங்க ஏதுவாக முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையில் வாங்க தவறியவர்கள் வரும் 13-ந்தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3,45,075 குடும்பங்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.

நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகரமன்ற உறுப்பினர் வினோத், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, துணை பதிவாளர் சந்திரன், தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன், நகர செயலாளர் பூங்காவனன் உள்பட அரசு அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொது விநியோக துணை பதிவாளர் சிவமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News