ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
- 26 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் காவனூரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி னார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காவனூர், புங்கனூர், பட்டினம், வரகூர், குப்பம், வெங்கடாபுரம் இன் னும் பல கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.
வெங்கடாபுரம் போன்ற மலைப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைபெற வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டி உள்ளது.
தற்போது இந்த மருத்துவ மனை தொடங்கப்பட்டால் அவசரகால சிகிச்சைகள், பிரசவங்கள், விஷ பூச்சி, விஷ பாம்பு கடிகள் போன்ற அவசர சிகிச்சைகளை இப்பகுதி மக்களால் விரைவில் பெற முடியும்.
பொதுமக்களின் அடிப் படை வசதிகளை நிறை வேற்றி தருவதில் முதல்- அமைச்சர் மிகவும் முக்கியத் துவம் அளிக்கிறார். பெண்கள் சுலபமாக தொழில் தொடங்கிடவும், தன்னிறைவு பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்திடவும் அதிகளவில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தனியார் இடத்தினை விலைக்கு வாங்க நன்கொடை வழங்கிய 26 பேருக்கு அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
இப்பணிக்காக முதன் முதலில் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு ரூ.1 லட்சம் வழங்கினார். அதன் பிறகு ஆற்காடு எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப் பன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா, பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொ றியாளர் திரிபுர சுந்தரி, வட் டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், ஆர் சேட்டு, பி. வடமலை, எஸ் ஆறுமுகம், பி.பொன்னரசன் பி.மகேந்திரன், கே.ஆர்.சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.