அரக்கோணம் ெரயில் நிலையத்தில் ெரயில் டிக்கெட் எடுக்க செயலி 'கியூ ஆர் கோடு' வசதி
- மாணவர்கள் ெரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு
- 9 இடங்களில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ெரயிலில் பயணிகள் செல்கின்றனர்.
இவர்கள் டிக்கெட் எடுப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் ெரயில் டிக்கெட் எடுக்கும் செயலி 'கியூஆர் கோடு' வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட் தவிர்த்து சாதாரண ெரயில், விரைவு ெரயில், அதிவிரைவு ெரயில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அரக்கோணம் ெரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டர் தொலைவு வரை இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
ெரயில் நிலைய வளாகத்திற்குள் 9 இடங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.
செங்குட்டுவன் மற்றும் அப்துல் கலாம் சாரணர், மணிமேகலை மதர் தெரசா சாரணியர் இயக்கம் தென்னக ெரயில்வே மத்திய மாவட்டம் இணைந்து பயண சீட்டு செயலி வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.
செங்குட்டுவன் சாரணர் இயக்க குழு தலைவர் குமாரசாமி தலைமையில் அப்துல் கலாம், சாரணர் இயக்க குழு தலைவர் திலீப் குமார் முன்னிலையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பயண சீட்டு முதன்மை அலுவலர் காதர் ஷெரிப், ஸ்டேஷன் மாஸ்டர் சுபாஷ் குமார், ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கியூ ஆர் கோடு குறித்து சாரண சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள் ெரயில் பயணிகளிடம் விளக்கிக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர், பிந்து புவனேஸ்வரி, ரம்யா, ஷர்வன் குமார், கஸ்தூரிபாய், ராம் தயால் போலி, கீர்த்தி வாசன், சுகன்யா, பிரியங்கா, சங்கீதா, மற்றும் சாரணர் சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.