வீட்டில் வெடிகுண்டு வெடித்து தொழிலாளி பலி; மகன் படுகாயம்
- காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக தயாரித்த போது பரிதாபம்
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெடி விபத்து குறித்து ஆய்வு
ஆற்காடு:
ஆற்காடு அடுத்தகிளைவ் பஜார் பகுதியில் 8-க்கும் மேற் பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் முருகன் (வயது 41) தொழிலாளி. காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டில் சட்ட விரோதமாக நாட்டு வெடி குண்டுகள் தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்துள்ளது.
இதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பகவதி (21) படுகாயம் அடைந்தார். அவரை ஆற்காடு அரசு மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச் சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முருகனின் வீடும் சேதமானது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆற்காடு தீயணைப்புத் துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி விபத்து குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.