நெமிலி பகுதியில் உள்ள ஏரிகளில் உலக வங்கி குழு ஆய்வு
- விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
- நீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரிவேடு ஊராட்சியில் உலக வங்கி நிதியின் வாயி லாக வேகவதி உபவடி நில பகுதியில் நீர்வளத்துறையின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் கரிவேடு ஏரி, தாமல் கால்வாய், கட்டுமானங்கள், தாமல் கசக்கால்வாய் புனரைமைப்பு பணிகளை உலக வங்கியின் நீர்வள வளர்ச்சி நிபுணர் யூப் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது ஏரிகள் மற்றும் கால்வாய்களில் நடைபெறும் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரிகள் சிறப்பாக தூர்வாரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் ஏரிகளின் கீழ் செல்லும் பாசன கால்வாய்களை அதிகாரிகள் உடனிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத் தரவும் கோரிக்கை வைத்தனர்.
ஏரிகளில் புதிதாக செயல்பாட்டிற்கு வந்துள்ள நீர் பாசன சங்கங்கள் வாயிலாக நிதி ஆதாரம் திரட்டி பாசன கால்வாய்களை சீரமைத்து கொள்ளவும், பணிகள் முடிக்கப்பட்டவுடன் ஏரிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், ஒற்றை பயிர் சாகுபடி போன்ற பயிர்கள் செய்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் விவசாய ஏரி நீர்பாசன சங்கங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ், உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் பிரபாகர் மற்றும் காவேரிப்பாக்கம் பாசன பிரிவு உதவி பொறியாளர் மெய்யழகன், பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செபஸ்டின் ரகோத்தமன் மற்றும் வே ளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் மற்றும் சார்பு துறை அலுவ லர்கள் விவசா யிகள்ஆகியோர் உடன் இருந்தனர்.