மழை நின்றதால் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
- மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது.
- 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை யின்போது 142 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் 2-ம் போக பாசனம் முழுமைக்கும் தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி 121.55 அடி நீர்மட்டம் உள்ளது. மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது. நேற்று 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.
பெரியாறு அணையிலி ருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 50.59 அடியாக உயர்ந்துள்ளது. 962 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 53.70 அடி யாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.