131 அடியாக சரிந்த நீர் மட்டம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
- இதனால் நீர் மட்டம 131.50 அடியாக சரிந்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்டவிவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதும் கேரள அரசு நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதை ஐவர் மற்றும் மூவர் குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர்.
தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் மட்டம 131.50 அடியாக சரிந்துள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1467 கன அடியில் இருந்து 1400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 52.62 அடியாக உள்ளது. அணைக்கு 1154 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 50.95 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.37 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.