உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவு குறைப்பு

Published On 2022-08-16 04:49 GMT   |   Update On 2022-08-16 04:49 GMT
  • மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுவிட்டது.
  • இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் நீர்மட்டம் கடந்த வாரம் முழுகொள்ளளவை எட்டியது. இதனைதொடர்ந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுவிட்டது.

இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காைல நிலவரப்படி 68.75 அடியாக உள்ளது. வரத்து 1956 கனஅடி, நேற்று வரை 2060 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 1166 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5509 மி.கனஅடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.75 அடியாக உள்ளது. வரத்து 1271 கனஅடி, திறப்பு 2150 கனஅடி, இருப்பு 6483 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு இல்லை. இருப்பு 435.32 மி.கனஅடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி, வரத்து 3 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.

Tags:    

Similar News