உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி நடைபெற்றது.

அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி

Published On 2023-07-12 09:58 GMT   |   Update On 2023-07-12 09:58 GMT
  • மாணவர்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
  • மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்லூரி வரவேண்டும்.

கும்பகோணம்:

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு இளங்கலை, இளமறிவியல், இளவணிகவியல்.

இளவணிக நிர்வாகவியல் மாணவர்களுக்குப் புத்தொளிப் பயிற்சியில்மா ணவர்களுக்கு கல்லூரியில் எவ்வாறு ஒழுக்கமாக இருக்க வேண்டும் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்மாதவி தலைமை தாங்கினார்.

கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் வேதியியல் துறைத் தலைவர் முனைவர்மீனாட்சிசுந்தரம், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர்குணசேகரன், தேர்வு நெறியாளர்சு ந்தரராசன், இந்தியப் பண்பாடு சுற்றுலாவியல் துறைத் தலைவர்தங்கராசு ஆகியோர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் தனது தலைமை யுரையில் "மாணவர்கள் கல்லூரி நாட்களில் சுதந்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், கல்வியால் மட்டுமே தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும்,

கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களின் கண்ணியமான ஆடைகளை அணிவதோடு உரிய நேரத்திற்கு வரவேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்."

இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News