உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம்- அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது

Published On 2023-09-25 09:13 GMT   |   Update On 2023-09-25 09:13 GMT
  • களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து நெல்லை வந்தார்.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வரும் உள்ளாட்சித்துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அமைச்சர் கே.என்.நேரு

கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் ஆகி யோர் தலைமை தாங்கி பேசினர்.

கூட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண், தனுஷ் குமார் எம்.பி., கலெக்டர்கள் கார்த்திகேயன், செந்தில்ராஜ், துரை ரவிச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, மார்க்கண்டேயன், பழனி நாடார், சண்முகையா, சதன் திருமலை குமார்,

மேயர்கள் சரவணன், ஜெகன் பெரியசாமி, மகேஷ், மாநகராட்சி கமிஷனர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, தினேஷ் குமார், ஆனந்த் மோகன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

இதில் நெல்லை, தூத்துக் குடி மாநகராட்சிகள், 3 மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு, அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர், மாநகராட்சிகளின் மண்டல சேர்மன்கள், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பேரூ ராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து காரில் இன்று அதிகாலை புறப்பட்டு நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விவசாய தொழி லாளர் அணி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News