உள்ளூர் செய்திகள்

கடையத்தில் நீர்ப்பாசன மடையை சீரமைக்க கோரிக்கை

Published On 2023-06-19 09:02 GMT   |   Update On 2023-06-19 09:02 GMT
  • குட்டிகுளம் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
  • மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகிறது.

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது குட்டி குளம். இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் உள்ள வாய்க்கால் பாசன மடை சேதம் அடைந்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது.

இதனால் இந்த மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகியும், தூரத்தில் உள்ள பயிர்கள் சரிவர நீர்ப்பாசனம் இல்லாததால் கருகியும் சேதமடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குட்டி குளம் மடையை சீரமைத்து தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் பொதுமக்கள் சார்பாக, மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News