உள்ளூர் செய்திகள்

காரைக்கால் கடற்கரை முகத்துவாரத்தில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ள காட்சி.

காரைக்கால், நாகை மாவட்டத்தில் திடீரென பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் பீதி : புகையை நிறுத்த கலெக்டர்கள் உத்தரவு

Published On 2023-05-10 07:45 GMT   |   Update On 2023-05-10 07:45 GMT
  • காரைக்கால் மாவட்த்திலுள்ள பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர்.
  • இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்,

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டம் மேல வாஞ்சூர், கீழவாஞ்சூர், நிரவி, திரு.பட்டினம், காரைக்கால் வடக்கு, தெற்கு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், திட்டச்சேரி திருமருகல் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை4.30 மணி முதல் திடீரென பனிமூட்டம் போல் புகைமூட்டம் ஏற்பட்டது.   திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும் சுவாசக் கோளாறினால் அவதி அடைந்தனர். மேலும் புகை மூட்டம், கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதியிலிருந்து வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் ஆகியோர் புகை குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனை அடுத்து நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சா லையிலிருந்து வெளியேறிய புகையினால், பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிரு ப்பதாக தகவல் வந்தன. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்மண்டலம் காரணமாக காற்று சுழற்சி இல்லாத காரணத்தி னால், புகை நாகை, காரைக்கால் மாவட்டங்க ளில் பனி போல் சூழ்ந்துள்ள தும் தெரியவந்தது. இதனையடு த்து காரை க்காலில் இயங்கிய இரும்பு உருக்கும் பணியை நிறுத்த நாகப்ப ட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவி ட்டனர். அதன் பேரில், இரும்பு உருக்கும் பணி நிறுத்தப்ப ட்டாலும் அதிலிருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு இருக்கிறது. புகைமூட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையி ல்லை என காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட கலெக்ட ர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

Tags:    

Similar News