ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்
- ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம் நடந்தது.
- மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் வேம்பு, இராமபத்திரன், கருணாநிதி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பழனிவேலு, முன்னாள் மாநில துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
ரயில் பயண சலுகை மீண்டும் பெற்றிட, 70 வயது பூர்த்தியாளர்களுக்கு 10 சதவீகிதம் கூடுதல் ஓய்வூதியம் பெற்றிட, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் 9000 வழங்கிடவும், பஞ்சப்படி, மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்கிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மயிலாடு துறை வட்ட பொருளாளர் அன்பழகன், தலைவர் விசுவநாதன், நகர வட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் கவுசல்யா சேகர், சீர்காழி ஜெயக்குமார், தரங்கம்பாடி வட்ட செயலாளர் அண்ணாதுரை, உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் நன்றி கூறினார்.