உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

Published On 2023-01-31 07:35 GMT   |   Update On 2023-01-31 07:35 GMT
  • மத்திய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  • தமிழக அரசின் மெத்தன போக்கால் திருப்பூரின் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன.

திருப்பூர்:

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கனகசபாபதி, பொது செயலாளர் முருகானந்தம், மேற்கு மாவட்ட பிரபாரி கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புது பஸ் நிலையம் மற்றும் டவுன் ஹாலுக்கு தியாகிகள் பெயர் சூட்ட வேண்டும். பல்லடம் புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனே துவக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய பூ மார்க்கெட்டை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

திருப்பூர் வடக்கு பகுதியில் பெண்களுக்கு தனி மேல்நிலைப்பள்ளி, பெண்கள் கல்லூரி, அதிநவீன புறநோயாளிகள் மருத்துவமனை துவக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டம் மற்றும் அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் இடம்பெற வேண்டும். தமிழக அரசின் மெத்தன போக்கால் திருப்பூரின் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரோடுகள் தரமாக அமைக்காதபட்சத்தில், பா.ஜ.க, வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. தரமாக அமைக்க வேண்டும்.

பின்னலாடை தொழில்துறையினருக்கு தேவையான மூலப்பொருள் தடையின்றி கிடைக்க வேண்டும். தமிழக அரசு மாநில அளவிலான பருத்தி கழகம் அமைத்து மாநிலத்தில் விளையும் பருத்தியை முழுமையாக வாங்கி ஜவுளித்துறைக்கு தடையின்றி வினியோகிக்க வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

Similar News