உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரிசி கடை மூடப்பட்டு உள்ள காட்சி. 

அரிசி ஆலை- கடைகள் இன்று மூடல்: கடலூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2022-07-16 08:52 GMT   |   Update On 2022-07-16 08:52 GMT
  • அரிசி ஆலை- கடைகள் இன்று மூடியதால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது.

கடலூர்:

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது. இந்த வரி விதிப்பினால் அரிசி விலை கணிசமாக உயரும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரிசி ஆலை அதிபர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரிசி ஆலை அதிபர்கள், அரிசி கடை உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் 250 அரிசி கடைகள், 30 அரிசி ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகள் மற்றும் கடைகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மூடினர். அதன்பின்னர் கடைகள் முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை பரிசீலனை செய்ய கோரி பதாகைகள் வைத்திருந்தனர். இந்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது

Tags:    

Similar News