விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையில் தடுப்புகள்
- பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.
- ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம்:
விழுப்புரம் நகரப் பகுதி யில் விழுப்புரம் -புதுவை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சாலை விதிகளை முறைப் படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாக சாலையின் நடுவே வாகனங்கள் சீராகவும், முறையாகவும் ,சென்றிட சாலை நடுவே பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வது தடுக்கப்பட்டது. போக்குவரத்து முறையாகவும் செல்ல வழி வகுத்தது. அப்படி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்புகள் தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் சில இடங்களில் உடைந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் மாவட்ட புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார்கள் விழுப்புரம் எஸ்.ஏ.டி. திரையரங்கம் முதல் விழுப்புரம் சிக்னல் வரை உள்ள ரிப்ளெக்ஸ் தடுப்புகளை பழுது பார்த்து ஒழுங்குப்படுத்தி விரைவில் ஒலிக்கும் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. இப்பணியில் இரவு பகல் பாராமல் போக்குவரத்துக் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.நாளை பள்ளிகள் திறக்க இருப்பதால் அதற்கு முன்பாகவே ஒழுங்குபடுத்தும் விதமாக தற்பொழுது பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.