உள்ளூர் செய்திகள்

பரிசு பெற்ற மாணவியை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.

நெல்லை எப்.எக்ஸ். கல்லூரி மாணவி கண்டுபிடிப்புக்கு ரூ.2 லட்சம் பரிசு

Published On 2023-03-03 09:03 GMT   |   Update On 2023-03-03 09:03 GMT
  • புதுமை வவுச்சர் திட்டம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சியாகும்.
  • மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

நெல்லை:

தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்டம் என்பது, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், பொறியியல், கழிவு மேலாண்மை, சுகாதாரம், ஆட்டோமொபைல், நானோ தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வற்றில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், ஸ்டார்ட் அப்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான மாநில அரசின் முயற்சியாகும்.

இது ஆராய்ச்சி, சரிபார்ப்பு, சந்தை ஆய்வு மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற அடுத்த கட்டங்களுக்குச் செல்ல புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இது செயல்படுத்தும்.

இது தொடர்பாக எப்.எக்ஸ். கல்லூரியின் தொழில் முனைவோர் துறை சார்பில் மாணவர்களுக்கு புதுமை வவுச்சர் திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் ஏற்பாட்டின் பேரில் தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி கலந்துகொண்டு திட்டம் குறித்த முக்கியத்து வத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதன் தொடர்ச்சியாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் கணினித் துறை 3-ம் ஆண்டு மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திடமிருந்து புதுமை வவுச்சர் திட்டத்தின் கீழ் கணினித்துறை மாணவி தர்ஷினி ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை பரிசு பெற்றுள்ளார். இந்தத் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா வழிகாட்டியாக செயல்பட்டார்.

இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த பொது மேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கணினி துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News