உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

தேனியில் ரூ.61.71 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு வங்கி கடன் கலெக்டர் முரளிதரன் வழங்கினார்

Published On 2022-12-30 06:08 GMT   |   Update On 2022-12-30 06:08 GMT
  • தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் 942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • ரூ.61.47 கோடி மதிப்பில் வங்கி கடன்கள் 11775 உறுப்பினர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

தேனி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற விழாவில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் 942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 11775 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.61.47 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவிகளையும் அதிக அளவில் கடன் வழங்கிய 2 வங்கிகளுக்கு மாவட்ட அளவிலான விருது மற்றும் சான்றிதழ்களையும், 6 வங்கிகளுக்கு கிளை அளவிலான வங்கியாளர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8473 உறுப்பினர்களுக்கு ரூ.52.02 கோடி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வங்கி பெருங்கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 39 குழுக்களை சேர்ந்த 468 உறுப்பினர்களுக்கு ரூ.1.65 கோடி, சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 118 குழுக்களை சேர்ந்த 1376 உறுப்பினர்களுக்கு ரூ.6.44 கோடி, சமுதாய முதலீட்டு நிதி திட்டத்தின்கீழ் 84 குழுக்களை சேர்ந்த 1008 உறுப்பினர்களுக்கு ரூ.1.25 கோடி, உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொடக்க நிதி திட்டத்தின்கீழ் ஒரு குழுவை சேர்ந்த 300 உறுப்பினர்களுக்கு கடன் உதவி உட்பட ரூ.61.47 கோடி மதிப்பில் வங்கி கடன்கள் 11775 உறுப்பினர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

இதில் மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News