உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு

Published On 2023-11-20 09:24 GMT   |   Update On 2023-11-20 09:24 GMT
  • கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ்சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
  • டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்காமராஜர் சதுக்கத்தை அடைந்தது

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, எருமாடு ஆகிய பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதன்ஒருபகுதியாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ் சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிர்வாகிகள் கணேசன், கன்னாவரை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்கெட்திடல், பஸ்நிலையம், தாலுகா அலுவலக சாலை, ராம்சந்த் சதுக்கம் வழியாக காமராஜர் சதுக்கத்தை அடைந்தது. தொடர்ந்து அங்குள்ள தனியார் அரங்கில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் பேண்டு வாத்தியத்துடன் சீருடை அணிந்து சென்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் பெண்கள் உள்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உருவப்படம் மற்றும் பாரதா மாதா புகைப்படம் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லும் பாதையை மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.

ஊர்வலம் நடை பெறுவதையொட்டி குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News