கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம்
- கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தேனி மாவட்ட தலைவர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார்.
வ. உ .சி திடலில் தொட ங்கிய ஊர்வலத்திற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் துரை.தங்கமாயன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தினை தேனி மாவட்ட கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்க செயலாளர் ஜெய பாண்டியன், கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் முருகேசன், கம்பம் இந்து நாடார் சங்க நிர்வாகி ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலமானது வ.உ.சி திடலில் இருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, எல்.எப்.மெயின்ரோடு, சிலப்பதிகாரம் தெரு, நெல்லு குத்தி புளியமரம் தெரு, கூலத்தேவர் முக்கு, வேலப்பர் கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல், பழைய பஸ் நிலையம், வரதராஜபுரம், கொண்டித்தொழு வழியாக வழியாக வ.உ .சி திடலில் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத் திடலில் ஆர். எஸ். எஸ் பயிற்சி மையத்தில் பயின்று வருபவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே, ஒருங்கிணைந்த செயல்பாடு, சுய கட்டுப்பாட்டு திற ன்களை வெளிக்காட்டினர்.
பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கோட்ட பொறு ப்பாளர் மகேஷ் சிறப்புரை யாற்றினார்.தேனி மாவட்டத்தில் இருந்து திரளான ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை முன்னிட்டு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.