ஊரக வளர்ச்சி துறையினர் வேலைநிறுத்தம்; பணிகள் முடங்கின
- ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
- கணினி உதவியாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி, கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற விதிகளை உடனே வெளியிட வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், அனைத்து நிலை பதிவு உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்,
ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ள ப்படும் ஒழுங்கு நடவடிக்கை களை கைவிட வேண்டும், அரசாணை எண் 54 திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வ தாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வராததால் அன்றாட ஊராட்சி ஒன்றிய பணிகள் பாதிக்கப்பட்டது.
இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலும் அலுவல ர்கள்,ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.