ஏற்காட்டில் ஊரக வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு முகாம்
- ஏற்காடு வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக ஏற்காடு வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் தலைமையில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் பெரியசாமி, ஆணையாளர் அன்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் மற்றும் மகளிர் திட்ட ஏற்காடு வட்டார மேலாளர் மகா லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார்.
இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகா மில் 10 தனியார் துறை நிறு வனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்களை தேர்ந்தெடுத்தனர். இதில் நேரடி வேலை வாய்ப்பாக 48 இளைஞர்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வழங்கப்படும் கட்டணமில்லா மெக்கானிக், சில்லரை விற்பனை மற்றும் சந்தை படுத்துதல், சர்வீஸ் அட்வைசர், வாட்ச்மேன், சூப்பர்வைசர், கணக்காளர், நர்சிங் போன்ற பல பயிற்சி களுக்கு 56 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வானவர்களுக்கு மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி பணி ஆணையை வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தார்கள்.