சபரிமலை சீசன் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
- சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
- சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த மாதம் வரை மழை மற்றும் பனி காரணமாக காய்கறிகள் வரத்து சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறி களுக்கு போதிய விலை கிடைக்க வில்லை. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தை போலவே கேரளாவிற்கும் காய்கறிகள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் (கலர் காய்) ரூ.60க்கும், பச்சை கத்தரி ரூ.100க்கும் விற்பனையாகிறது. தக்காளி ஒரு பெட்டி ரூ.400, வெண்டை ஒரு கிலோ ரூ.50, புடலங்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.20, பூசணிக்காய் ரூ.20, அவரை ரூ.80, கொத்தவரக்காய் ரூ.30, முருங்கை ரூ.80, சம்பா பச்சை மிளகாய் ரூ.30, உருண்டை மிளகாய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.80, பல்லாரி ரூ.60, கருணை க்கிழங்கு ரூ.60, சேனை க்கிழங்கு ரூ.60 என விற்பனையாகிறது.
மார்க்கெட் விலை யிலேயே இந்த நிலவரம் என்றால் சில்லரை க்கடைகளில் இதை விட சற்று கூடுதலாகவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்து ள்ளனர். சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விைல குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.