உள்ளூர் செய்திகள்

இரா.மணிமாறன்-தாளாளர்

பிளஸ்-2 தேர்வு முடிவில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி 99.51 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-21 10:23 GMT   |   Update On 2022-06-21 10:23 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
  • மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பர்க் மேல்நிலைப்பள்ளியில் 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.51 ஆகும். தேர்வில் மாணவி ஜான்சிராணி 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் 99, உயிரியல் 98 வேதியியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் ராம்குமார் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 94, இயற்பியல் மற்றும் வேதியியல் 98, உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் சாய் கணேஷ் 587 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் 95, இயற்பியல் மற்றும் கணக்கு 100, வேதியியல் 98, உயிரியல் 99 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதன்மோகன் 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் பாடம் வாரியாக, தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 98, கணக்கு 97 ஆகிய மதிப்பெண்கள் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் 12 பேரும், வேதியியல் பாடத்தில் 17 பேரும், இயற்பியல் பாடத்தில் 4 பேரும், உயிரியலில் 2 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 2 பேரும் ஆக மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 பேரும் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் இரா.மணிமாறன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News